தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் பகவதி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 12,431 சதுர அடி இடத்தில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் படகு கிளப் செயல்பட்டுவருகிறது.
இந்த இடத்திற்காக கப்பல் போக்குவரத்துக் கழகம், 1984ஆம் ஆண்டு முதல் கோயில் நிர்வாரத்திற்கு குத்தகை தொகை செலுத்தி வந்த நிலையில், சமீபகாலமாக உரிய குத்தகை தொகையை செலுத்தவில்லை. அந்த வகையில் கோடிக்கணக்கான ரூபாய் நிலுவையில் உள்ளது. இதனிடையே கோயில் நிர்வாகம் உரிய வருமானம் இன்றி, செலவுகளை சமாளிக்க முடியாத நிலையில் உள்ளது.