மதுரை:காதலிக்கும் போது சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவேன் என்று மிரட்டுவதாக, நாகர்கோவிலை சேர்ந்த முகமது என்பவர் மீது பெண் ஒருவர் புகார் அளித்தார். அதனடிப்படையில், நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் முகமதை மார்ச் 10ஆம் தேதி கைது செய்தனர்.
இதையடுத்து முகமது தனக்கு ஜாமீன் வழங்க கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு நேற்று (ஏப்.13) விசாரணைக்கு வந்தது. அப்போது, முகமது தரப்பில், இதுவரை எந்த புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும், அதை உறுதிசெய்தனர்.