ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் பண்டாரம்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்," தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு காவல்துறையினரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலையாகும்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கு தள்ளுபடி!
மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் விதமாக பேரணி, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஏராளமான மனித உரிமை ஆர்வலர்கள் மீது காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் மே 22 ஆம் தேதி மாலை 4.30 முதல் 5.30 மணி வரை பால விநாயகர் கோவில் தெருவில் இருந்து சிதம்பர நகர் பேருந்து நிலையம் வரை பேரணியும், சிதம்பர நகர் பேருந்து நிறுத்தத்தில் ஆறு மணி முதல் 8 மணி வரை பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதி வழங்க கோரியிருந்த நிலையில், மே 23 வாக்கு எண்ணிக்கை என்பதால் அனுமதி வழங்கவில்லை.
ஆகவே, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சமபவத்திற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் விதமாக பேரணி, பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளிக்க காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவித்ததையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.