தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தொல்லியல் துறையில் தமிழ் புறக்கணிப்பு - அவசர வழக்காக நாளை விசாரணை - தொல்லியல் துறை

மதுரை: தமிழ் மொழியை புறக்கணித்து மத்திய தொல்லியல் துறை வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யக் கோரிய வழக்கை அவசர வழக்காக உயர் நீதிமன்ற மதுரை கிளை நாளை விசாரிக்க இருக்கிறது.

court
court

By

Published : Oct 8, 2020, 1:15 PM IST

மத்திய தொல்லியல் துறையின் நிறுவனம் உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் இயங்கிவருகிறது. இந்நிறுவனம், தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்புக்கான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய வரலாறு, தொல்லியல் துறை, மானுடவியல் மற்றும் செம்மொழிகளான சமஸ்கிருதம், பாலி, மற்றும் அரபு மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய தொல்லியல் துறையின் முதுகலைப் பட்டயப் படிப்புக்கான கல்வித் தகுதியில், செம்மொழியான தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ள அறிவிப்பாணையை ரத்து செய்து, தமிழ் மொழியையும் இணைக்க உத்தரவிட வேண்டும் என்றும், இவ்வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், வழக்கறிஞர் அழகுமணி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்துள்ளார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, இவ்வழக்கை அவசர வழக்காக நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: சமூகச் சீர்கேடுகள் செய்யும் படத்தை அரங்கேற்றாதீர்கள்! - பாரதிராஜா வேதனை

ABOUT THE AUTHOR

...view details