சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கில் சிபிஐ விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதனிடையே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஒன்பது காவலர்களும் பிணை கோரி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்திலும், மதுரை மாவட்ட நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் அங்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், ” இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தூத்துக்குடி நீதிமன்றத்தில் சிலரும், மதுரை நீதிமன்றத்தில் சிலரும் மனு தாக்கல் செய்துள்ளனர். ஆனால், வழக்கை சிபிஐ விசாரித்து செய்வதால் எங்கு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் குழப்பம் உள்ளது. எனவே, இந்த வழக்கை சிறப்பு அமர்வுக்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டும் ” என தெரிவித்திருந்தார்.