தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிறை கைதி கொலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு! - மதுரை நீதிமன்ற செய்திகள்

பாளையங்கோட்டை சிறையில் கைதி கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பதை அறிக்கையாகத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாளையங்கோட்டை கைதி கொலை
பாளையங்கோட்டை கைதி கொலை

By

Published : Apr 27, 2021, 10:14 PM IST

Updated : Apr 27, 2021, 10:20 PM IST

மதுரை: பாளையங்கோட்டை சிறையில் கைதி முத்து மனோ கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், முத்துமனோவின் உடற்கூறாய்வை காணொலி பதிவு செய்யவும், கவனக்குறைவாக செயல்பட்ட சிறைத்துறை அலுவலர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும், வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் இளங்கோ முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், “முத்து மனோ வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிறைத் துறையினர் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். உடற்கூறாய்வு முழுமையாகப் படம்பிடிக்கப்பட்டது” என தெரிவிக்கப்பட்டது.

பாளையங்கோட்டை கைதி கொலை

இதையடுத்து நீதிபதி, உடற்கூறாய்வு முடிக்கப்பட்ட முத்து மனோவின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுக்கொள்ளவேண்டும். அரசுத் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Last Updated : Apr 27, 2021, 10:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details