தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவில் உள்ள 182 ஏக்கர் அரசு நிலம் அதிமுக ஆட்சியில், அதிகாரிகள் துணையோடு பலருக்கு முறைகேடாக பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் குவாரி நடத்தப்பட்டது. இதுதொடர்பாக அதிமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில், அதிமுக நிர்வாகி அன்ன பிரகாஷ், ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பாக இன்று (ஏப். 20) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், நிபந்தனையுடன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.