புதுக்கோட்டை மாவட்டம் தேனிப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் 2019ஆம் ஆண்டு தனது இரண்டாவது மனைவியை கொலை செய்தார். இதுகுறித்து கணேஷ் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. அதாவது இரண்டாவது மனைவியின் 17 வயது மகளுக்கு முருகேசன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துவந்தார். அதை இரண்டாவது மனைவி தட்டிக்கேட்கவே, அவரை அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.
மனைவியை கொன்று, மகளுக்கு பாலியல் தொல்லை... குற்றவாளிக்கு தூக்கு ரத்து... ஆயுள் உறுதி... - wife murdered man gets death penalty
புதுக்கோட்டையில் மனைவியை கொன்றுவிட்டு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவருக்கு மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த புதுக்கோட்டை நீதிமன்றம், முருகேசனுக்கு தூக்கு தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி முருகேசன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று (மார்ச் 30) நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் அமர்வில் வந்தது. அப்போது நீதிபதிகள், தூக்கு தண்டனையை ரத்து செய்தும், ஆயுள் தண்டனையை உறுதி செய்தும் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:போக்குவரத்துத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றபின் முதலமைச்சரை சந்தித்த எஸ்.எஸ்.சிவசங்கர்