மதுரை:தேனி மாவட்டம் வைகை அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டியதால் அணையிலிருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியைத் தாண்டி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது.
இந்நிலையில் வைகை அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரும், வைகை அணையை ஒட்டியுள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் வெளியேறும் உபரிநீரும் சேர்ந்து வைகை ஆற்றில் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால் யானைக்கல் தரைப்பாலம் முழுமையாக நீரில் மூழ்கியது. இதனையடுத்து தரைப்பாலத்தில் பொதுமக்கள் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மதுரை வைகை ஆற்றங்கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள இடர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.