மதுரை மாநகரில் கொலை, கொள்ளை வழிப்பறிச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதை தடுக்கும் விதமாக மாநகர காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நகரின் முக்கிய சந்திப்புகளில் புறகாவல் நிலையங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, திருப்பரங்குன்றம் காவல்நிலையத்துக்குட்பட்ட பகுதியான விளாச்சேரி மெயின்ரோட்டில் கண்காணிப்பு கேமராவுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புறகாவல் நிலையத்தை மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையர் சிவபிரசாத் திறந்துவைத்தார்.