தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

எதிர் வீட்டுக்காரரை கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை - மதுரை நீதிமன்றம் தீர்ப்பு! - மதுரையில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

வீட்டுவாசலில் கழிவு நீர் கொட்டியதை தட்டிக் கேட்டவரை கொலை செய்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மதுரை நீதிமன்றம்
மதுரை நீதிமன்றம்

By

Published : Dec 7, 2020, 8:30 PM IST

மதுரை:மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்டது ஆலம்பட்டி கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் பவுன்ராஜ். இவரது எதிர் வீட்டில் வசித்தவர் முக்தீஸ்வரன்.

கடந்த 2010ஆம் ஆண்டு முக்தீஸ்வரன் பயன்படுத்திய கழிவு நீரை பவுன்ராஜ் வீட்டு வாசலில் ஊற்றிய விவகாரத்தில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இந்த தகராறில், முக்தீஸ்வரன், அழகு பாண்டி, தங்கபாண்டி, மற்றும் செல்வம் ஆகிய 4 பேர் பவுன்ராஜை கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக, திருமங்கலம் புறநகர் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து, சம்மந்தப்பட்டவர்களை கைது செய்தனர்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேரில், முக்தீஸ்வரன், அழகு பாண்டி, தங்கபாண்டி, செல்வம் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மதுரை மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி தாண்டவன் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:பொதுமக்களே ஊழல்வாதியாக மாறிவிட்டார்கள் - நீதிபதிகள் வேதனை!

ABOUT THE AUTHOR

...view details