மக்களவைத் தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ள நிலையில் பெரும்பாலான தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மதுரை மக்களவைத் தொகுதியில் பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் சொத்து மதிப்பு எவ்வளவு? - சு வெங்கடேசன்
மதுரை: திமுக கூட்டணி சார்பாக மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனின் சொத்து மதிப்பு 3.26 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மக்களவைத் தொகுதியில் களமிறங்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் தேர்தல் அலுவலர் நடராஜனிடம் தனது சொத்து மதிப்பை தாக்கல் செய்துள்ளார். அதன்படி, தனது அசையும் சொத்து மதிப்பு ரூபாய் மூன்று லட்சத்து 26 ஆயிரத்து 671 ரூபாய் என்றும், தனது துணைவியார் கமலாவுக்கு ஒன்பது லட்சத்து 25 ஆயிரத்து 75 ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மகள்கள் யாழினி பெயரில் 43 ஆயிரத்து 160 ரூபாய், தமிழினி பெயரில் 64 ஆயிரத்து 359 ரூபாய் எனவும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி வெங்கடேசனின் பூர்வீக சொத்து மதிப்பு நான்கு லட்சத்து 50 ஆயிரம். தற்போது கையிருப்பாக ரூ. 30,000 வைத்துள்ளதாக அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.