மதுரை மாவட்ட ஆட்சியர் த.அன்பழகனின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், குடும்ப உறுப்பினருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஆட்சியர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.