மதுரை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்டப் பகுதியில் 56ஆவது வார்டு உள்ளது.
இதில் தாய் நகர், பூம்புகார் நகர், மாருதி நகர் உள்ளிட்டப் பகுதிகளின் வழியாக அனுப்பானடி பெரிய கண்மாயில் இருந்து, பனையூர் விவசாய நிலத்திற்குச் செல்லக்கூடிய பாசனக் கால்வாயில், கடந்த சில ஆண்டுகளாக தனி நபர்கள் சிலர் கட்டடங்கள் கட்டி, ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இதனால், பனையூர் பகுதியில் நடைபெறும் விவசாயத்திற்குத் தேவையான தண்ணீர் செல்ல வழி இல்லாமல் இருந்து வருகிறது.
Madurai Canal Missed Poster இந்தக் கால்வாய் பாதை மிகவும் சுருங்கி, தற்போது கழிவுநீர் குட்டையாக ஆக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை மாநகராட்சியிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கால்வாயைக் காணவில்லை - மதுரையை கலக்கும் நூதன சுவரொட்டி இதனால் மனமுடைந்தபோன மதுரை மக்கள், 'காணவில்லை... காணவில்லை... பாசன கால்வாயை காணவில்லை..!' என நூதனமுறையில் சுவரொட்டி அடித்து, அனுப்பானடி பகுதி முழுவதும் தெருக்களில் ஒட்டி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.