தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு உத்தரவுக்கு இடைக்காலத் தடை! - Madurai branch of the High Court

மதுரை: தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்விற்கு இடைக்கால தடைவிதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்விற்கு இடைக்கால தடைவிதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

By

Published : Mar 26, 2021, 10:18 PM IST

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல், பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதற்கு எதிராகத் தலைமை ஆசிரியர்கள் பலர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, இறுதி விசாரணையில், அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும். அதன் பிறகு தலைமை ஆசிரியர்கள், பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்துசெய்யக் கோரியும், தடைவிதிக்கக் கோரியும் அரசு சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல்செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ். ஆனந்தி அமர்வு, ஏப்ரல் 30ஆம் தேதி தலைமை ஆசிரியர்கள், இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:கன்னியாகுமரி ஆதிகேசவ பெருமாள் கோயில் குடமுழுக்கு நடத்தக் கோரிய வழக்கு: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details