தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வீட்டை மத வழிபாட்டுத்தலமாகவோ பிரசாரம் செய்யும் இடமாகவோ மாற்ற அனுமதிக்க முடியாது என உத்தரவு - Religious

பாதிரியார் தொடர்ந்த வழக்கில் "வீட்டை மத வழிபாட்டுத் தலமாகவோ பிரசாரம் செய்யும் இடமாகவோ மாற்ற அனுமதிக்க முடியாது" என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 14, 2022, 3:28 PM IST

மதுரை: கன்னியாகுமரி மாவட்டம், திங்கள் சந்தை கிராமத்தைச்சேர்ந்தவர் பாதிரியார் மரியா ஆரோக்கியம். இவர் தனக்குச்சொந்தமான குடியிருப்புக்கட்டடத்தில் கிறிஸ்தவ மத போதனை மற்றும் வழிபாடு நடத்தி வந்துள்ளார்.

இதற்கு அப்பகுதியைச்சேர்ந்த சிலர் கடும் எதிர்ப்புத்தெரிவித்ததால் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அக்குடியிருப்பில் மதப் பிரார்த்தனை நடத்த தடை உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார் பிறப்பித்த உத்தரவில், ’மனுதாரர் 1996 முதல் 2009 வரை தனது குடியிருப்பை மத வழிபாட்டிற்குப் பயன்படுத்தி வந்துள்ளார். இதில் அப்பகுதியைச்சேர்ந்த 80% மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அக்குடியிருப்பு வீட்டை மதப்பிரசாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என தடை விதித்துள்ளார். மேலும், அரசின் விதிமுறைப்படி குடியிருப்பு வீட்டை மத பிரசாரம் அல்லது வழிபாட்டு இடமாக மாற்ற அனுமதி இல்லை. அவ்வாறு அனுமதி பெற வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியர் தான் அனுமதிக்க வேண்டும்.

ஆனால், இந்த வழக்கில் மாவட்ட ஆட்சியர் தான் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க அக்குடியிருப்பு வீட்டில் மதப்பிரசாரம் செய்து வழிபாடு செய்யக்கூடாது எனத் தடை விதித்துள்ளார். மேலும், மனுதாரர் வீட்டிற்கு அருகிலேயே 200 மீட்டர் தூரத்தில் இரண்டு கிறிஸ்தவ ஆலயங்கள் வழிபாட்டுக்கு உள்ளன. 300 மீட்டர் தூரத்தில் இந்து வழிபாட்டுத்தலமும் உள்ளது.

இதன் அடிப்படையில் சட்டம் ஒழுங்கையும் அமைதியையும் பாதுகாப்பது மாவட்ட ஆட்சியரின் கடமை. எனவே மாவட்ட ஆட்சியரின் உத்தரவை நீதிமன்றம் தடை விதிக்க வேண்டியது இல்லை’ எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க: எதை கையில் எடுக்கிறார்களோ அவர்களுக்கு அதுவே திரும்பி வரும்... காலணி வீச்சு சம்பவம் குறித்து கே.என்.நேரு

ABOUT THE AUTHOR

...view details