தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பியூனோ, ஹெச்எம்மோ அனைவரும் சமம் தான் - மதுரைக்கிளை நீதிபதி - பியூனானாலும் தலைமை ஆசிரியரானாலும் அனைவரும் சமம் தான்

அனைத்து நிலைகளில் உள்ள அலுவலர்களும் சமமானவர்களே, யாரும் மேலானவர்களோ, கீழானவர்களோ இல்லை என உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் கருத்து தெரிவித்துள்ளார்.

தலைமை ஆசிரியரானாலும் அனைவரும் சமம் தான்
தலைமை ஆசிரியரானாலும் அனைவரும் சமம் தான்

By

Published : Mar 5, 2022, 4:56 PM IST

ஆசிரியர் பணி இட மாறுதல்கள், அதற்கான கலந்தாய்வு தொடர்பான வழக்குகள், உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன்பாக விசாரணைக்கு வந்தன.

ஏற்கனவே, வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பல்வேறு கேள்விகளை எழுப்பி பள்ளிக்கல்வித்துறைச் செயலர், லஞ்ச ஒழிப்புப் பிரிவு இயக்குநர் ஆகியோரை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று (மார்ச்.04) இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன், "பள்ளியின் பியூனானாலும், தலைமை ஆசிரியரானாலும், அலுவலரானாலும் புகார் எழுந்தால், முறையாக விசாரிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பாலியல் தொந்தரவு புகார்களுக்கு மட்டுமின்றி எந்த புகார் எழுந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அனைத்து நிலைகளில் உள்ள அலுவலர்களும் சமமானவர்களே. யாரும் மேலானவர்களோ, கீழானவர்களோ இல்லை" என கருத்து தெரிவித்தார்.

பின்னர், மனுதாரர் தரப்பிலும், அரசுத்தரப்பிலும் கால அவகாசம் கோரப்பட்டது. இதை, ஏற்றக்கொண்ட நீதிபதி வழக்கை மார்ச் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:காவல் துறையினருக்கு எதிரான புகார்களை, அவர்களே எப்படி விசாரிக்க முடியும்; நீதிமன்றம் கேள்வி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details