இது குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில், தமிழ்நாட்டில் உள்ள பிற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மீது புகார்கள் எழுந்தபோது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. வழக்கில் முகாந்திரம் உள்ளதா, இல்லையா? என்று பார்க்காமல் விசாரணைக்கு அவசரம் காட்டுவது ஏன்? சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடைவிதிக்கக் கூடாது? எனக் கேள்விகள் எழுப்பட்டன.
'சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடைவிதிக்கக் கூடாது?'
16:48 November 30
துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடைவிதிக்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை நடத்த உயர் கல்வித் துறை முதன்மைச் செயலர் வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் நீதிபதிகள் இவ்வாறு கேள்வி எழுப்பினர். மேலும் சூரப்பா மீது முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய புகாரின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு குறித்த ஆவணங்களை அரசு தாக்கல்செய்ய வேண்டும்.
அதற்கு மத்திய அரசு பதில் மனு தாக்கல்செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டு, வழக்கு விசாரணை டிச. 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சூரப்பாவிற்கு எதிராக இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளன என விசாரணைக் குழு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிரான அரசாணையை ரத்த செய்ய கோரி மனு...