தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் 50 விழுக்காடு தள்ளுபடி! - madurai saloon offer for vaccinated

மதுரையில் உள்ள அழகு நிலையம் ஒன்று, கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ்களுடன் வருபவர்களுக்கு 50 விழுக்காடு வரை தள்ளுபடி அளிப்பதாக அறிவித்துள்ளது.

madurai saloon offer for vaccinated
madurai saloon offer for vaccinated

By

Published : Jun 20, 2021, 2:42 PM IST

மதுரை:கரோனா தொற்று இரண்டாம் அலை தமிழ்நாட்டில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தபட்டுள்ளன.

நகர்புறத்தைக் கடந்து தற்போது கிராம்ப்புறங்களில் உள்ள மக்களும் கரோனா தடுப்பூசிகளை செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இச்சூழலில் மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் அருகிலுள்ள அழகு நிலையம் ஒன்று, மக்களிடையே தடுப்பூசி செலுத்துவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் செயல்பட்டு வருகிறது.

'இது தந்தையின் தாலாட்டு' தந்தையர் தின ஸ்பெஷல்..

தங்களது கடையில் ஹேர் கட்டிங் தொடங்கி ஃபேஷியல் வரை எந்த சேவையைப் பயன்படுத்தினாலும், அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் அல்லது குறுந்தகவலை காண்பித்தால் அந்த வாடிக்கையாளர்களுக்கு 50 விழுக்காடு சலுகை வழங்கப்படும் என்று அதிரடி காட்டியுள்ளது.

அழகு நிலைய உரிமையாளர் பேட்டி

மதுரை மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தச் சலுகையை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளனர்.

தனது லாபத்தைக் கூட பொருட்டாக எண்ணாமல் கரோனா பெருந்தொற்று காலத்தில், தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் அழகு நிலைய உரிமையாளரின் செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details