தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய பகுதிகளில் நிலைகொண்டிருந்த புரெவி புயல் வலுவிழந்த நிலையில் தற்போது நகர்ந்துவருகிறது. அந்தச் சமயம் தென் மாவட்டங்களில் 25 நாட்டிகள் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளதால் மதுரை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதற்கும் மேலெழும்புவதற்கும் சவாலாக அமைய வாய்ப்புள்ளது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை மதியம் 12 மணிவரை மதுரை விமான நிலையம் விமான சேவையின்றி மூடப்படுவதாக மதுரை விமான நிலைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நாளை (டிச. 05) காலை முதல் மதியம் 12 மணி வரையில் சென்னையிலிருந்து 10.30 மணிக்கு மதுரை வரும் ஸ்பைஸ் ஜெட் விமானம், 10.40 மணிக்கு மதுரை வரும் இண்டிகோ விமானம் ஆகிய இரண்டு விமானங்களின் சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக வந்தே பாரத் திட்டத்தின்கீழ் வெளிநாடுகளிலிருந்து புலம்பெயர் தமிழர்களை மீட்டுவரும் விமானங்கள் சிறிது காலதாமதத்திற்குப் பிறகு காற்றின் வேகம் குறித்து தரையிறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பயணிகள் விமான நிலையத்திற்கு வருவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும், தொடர்ந்து கனமழையால் விமான நிலைய ஓடுதளங்களில் தேங்கும் மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் சென்னை புறப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லாமல் மாலை 6.30 மணியளவில் மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னைக்குச் செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
புரெவி புயல் முன்னெச்சரிக்கை: நாளை மதியம்வரை மதுரை விமான நிலையம் மூடல்! - Passengers flight cancelled
மதுரை: புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (டிச. 05) மதியம் 12 மணிவரை மதுரை விமான நிலையம் மூடப்படுவதாக மதுரை விமான நிலைய இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
airport
இதையும் படிங்க: மதுராந்தக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!