மதுரை: ஆதீனம் 292ஆவது குருமகா சன்னிதானமாக இருந்த ஸ்ரீ-ல-ஸ்ரீ தேசிக பரமாச்சாரிய ஞானசம்பந்தர், உடல்நலக்குறைவால் காலமானதை அடுத்து, புதிய ஆதீனமாக தற்போதைய ஹரிஹர சுவாமிகள் பொறுப்பேற்றுள்ளார். அவர் இன்று (ஆக.29) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், 'மதுரை ஆதீனம் கி.பி. 6ஆம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ்நாட்டிலுள்ள பிற ஆதீன மடங்கள் அனைத்தும் மிகப் பின்னால் உருவானவை. நான் முதன் முதலாக குன்றக்குடி ஆதீனத்தில் இருந்தேன்.
தருமை ஆதீன கர்த்தர் எனக்கு அருள் வழங்கினார். திருவாவடுதுறை ஆதீன கர்த்தர் என்னை ஆளாக்கினார். மதுரை ஆதீனம் 292ஆவது குரு மகா சன்னிதானம் எனக்குப் பதவி வழங்கினார்.
மதுரை ஆதீனத்தின் சார்பாக 'தமிழாகரம்' எனும் மாத இதழ் இனி வெளியாகும். மேலும் மதுரை ஆதீனம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஓதுவாருக்கான ஞானசம்பந்தர் விருது, சைவ சமயத்தில் சிறப்புடன் விளங்கும் பெண் ஒருவருக்கு மங்கையர்க்கரசியார் விருது, பாண்டிதுரை தேவர், வ.உ. சிதம்பரனார், வள்ளலார் பெயர்களில் விருதுகள் வழங்கப்படும்.
நித்தியானந்தா குறித்து பேசிய ஆதீனம்