தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'சிறப்பான வகையில் திமுகவின் ஆட்சி நடக்கட்டும்' - மதுரை ஆதீனம் வாழ்த்து - Dmk victory

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மதுரை ஆதீனம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மதுரை ஆதினம் வாழ்த்து
மதுரை ஆதினம் வாழ்த்து

By

Published : May 3, 2021, 1:08 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. வரும் மே 7ஆம் தேதி திமுக தலைவர் முக ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மதுரை ஆதினம் வாழ்த்து

மதுரை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கும் முக ஸ்டாலினுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அமையவிருக்கும் அமைச்சரவையில் பங்கேற்கும் அமைச்சர்களுக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம் மதுரை ஆதீனம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். சிறப்பான வகையில் திமுகவின் ஆட்சி நடக்கட்டும்! எல்லோருக்கும் ஆசிர்வாதம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details