மதுரை ஆதீனத்திற்கு பாதுகாப்பு தர வேண்டி மதுரை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் அர்ஜுன் சம்பத் மனு அளித்தார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மதுரை ஆதீனம் அவர்களுக்கு தற்போது அரசியல்வாதிகளாலும் நடிகர்களின் ரசிகர்களும் இன்னபிற சக்திகளாலும் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகிறார். மதுரை ஆதீன மடத்திற்கு குரு சன்னிதானத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
மதுரை ஆதீனம் அரசியல்வாதிகளைப் போல் நடந்து கொள்ளுகிறார் என்றும் நாங்கள் அவர் மீது பாய்ந்து விடுவோம் என்று அறநிலை துறை அமைச்சர் குரு சன்னிதானத்தை அச்சுறுத்தி வருகிறார். இது ஒரு அபாயகரமான போக்கு. மதுரை ஆதீனத்திற்கு அரசியலுக்கும் பெரிய தொடர்பு கிடையாது அவர் அரசியல் பேசவில்லை.
இந்து சமய நம்பிக்கைகள் இழிவுபடுத்தப்பட்டு உள்ளது. சிதம்பர நடராஜ பெருமானை இழிவுபடுத்தி கருத்துக்களை வெளியிட்டவர்கள் கைது செய்யப்படவில்லை. திரைப்படங்களில் இந்து மத சமய கடவுள்களை இழிவு படுத்த படுகிறது. இந்து சமயத்திற்கு ஒரு வில்லங்கம் என்றால் மதுரை ஆதீனம் குரல் கொடுப்பார். அதிமுகவிற்கு ஆதரவா இருப்பார் பிஜேபி ஆதரவாளார் என்பதெல்லாம் கிடையாது.
இந்து மத சமய நம்பிக்கைகள் சீர் குறைவதும் கோயில்கள் அறநிலையத் துறையில் பிடியில் இருப்பதும் 50 வருடங்களாக இருந்து வருகிறது. இது தொடர்ந்து வலியுறுத்தி வரக்கூடிய கருத்து இந்தக் கருத்தைத்தான் வெளிப்படுத்தியுள்ளார். மதுரை அதிகம் அதிமுக காலகட்டங்களிலும் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த கருத்து நடிகர் விஜய்க்கு அல்லது அரசியல்வாதிகளுக்கு எதிரான கருத்து கிடையாது. இது விஜய் ரசிகர்கள் அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது விஜய் ரசிகர்கள் ஆதீனத்தின் மீது தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடுகின்றனர். தாய் தகப்பனை விட நடிகர் விஜய் பெரிய நபர் ஒன்றும் கிடையாது. விஜய் தன் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும்.
எப்பொழுதும் போல மதுரை ஆதீனம் ஞானசம்பந்தர் வழியிலே தன் பணிகளை செய்து வருகிறார். இந்து சமய அமைப்புகள் அவருக்கு ஆதரவாக உள்ளது. அவர் எல்லா ஆன்மீக சமய அமைப்புகளையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார். அறநிலையத் துறை அமைச்சரே பாய்வோம் என்று சொல்லியுள்ளார். ஆகைய காரணத்தால் மத்திய அரசு மதுரை ஆதீனத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
சு.வெங்கடேசன் தொடங்கி வைத்த செஞ்சட்டை பேரணியில் பல்வேறு அருவருக்கத்தக்க கருத்துக்கள் வெளியாகி உள்ளது. இது கண்டனத்துக்குரியது. இந்த கருத்துக்கள் மூலமாக மிகப்பெரிய வருத்தத்தில் உள்ளோம். சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் கொடுத்துள்ளோம். ஆனால் அவர்கள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சு.வெங்கடேசனும் மதுரை ஆதீனத்தை மிரட்டுவது போல் பேசி வருகிறார். அவருக்கும் எனது வன்மையான கருத்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.