தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விமானத்தில் பறந்தபடி நடந்த திருமணமத்திற்கு... ஸ்பீடாக வழக்குப்பதிந்த போலீஸ்! - விமான நிலைய இயக்குநர்

தனி விமானத்தைப் பதிவுசெய்து திருமணம் முடித்துக்கொண்ட தம்பதிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வானில் திருமணம்
வானில் திருமணம்

By

Published : May 24, 2021, 4:06 PM IST

Updated : May 24, 2021, 4:55 PM IST

மதுரை: திருமணத்திற்குத் தனி விமானத்தைப் பதிவுசெய்து, கரோனா வழிமுறைகளைப் பின்பற்றாமல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் மீதும், அவர்களின் உறவினர்கள் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

மதுரையில் விமானத்தை வாடகைக்கு எடுத்து, வானில் பறந்தபடி மணப்பெண்ணின் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். அப்போது அவர்களின் உறவினர்களும் உடன் இருந்தனர்.

ஆனால், இதுகுறித்த படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவ, கரோனா வழிமுறைகளைப் பின்பற்றாமல் திருமண ஏற்பாடுகள் செய்ததற்காக மணமக்கள் மீது மதுரை விமானநிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

"நடு வானில் விமானத்தினும் திருமணம் நடக்கவிருந்தது குறித்து எங்களுக்குத் தகவல் எதுவும் கொடுக்கப்படவில்லை" என விமான நிலைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

விமான நிலைய ஒழுங்குமுறை ஆணையமும் சம்பவம் குறித்து துரிதமாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: 'அண்ணாந்து பார்க்க வைத்த கல்யாணம்' - விமானத்திற்குள் டும்.. டும்.. சத்தம்

Last Updated : May 24, 2021, 4:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details