மதுரை:நகராட்சியாக இருந்த மதுரை 1971ஆம் ஆண்டு மாநகராட்சியாக தகுதி உயர்வு பெற்றது. அதன் முதல் மேயராக முத்து என்பவர் அறிவிக்கப்பட்டார். அதன்பிறகு கடந்த 1978ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் மாநகராட்சி தேர்தலில் மேயராக முத்து தேர்வு பெற்றார். மதுரை மாநகராட்சியில் இதுவரை மேயராகப் பொறுப்பில் இருந்தவர்கள் விவரம் பின்வருமாறு,
எஸ். முத்து (1971–1980)
எஸ். கே. பாலகிருஷ்ணன் (1980–1982)
எஸ். பட்டுராஜன் (1982–1984)
பி. குழந்தைவேலு (1996–2001)
சி. ராமச்சந்திரன் (2001–2006)
ஜி. தேன்மொழி கோபிநாதன் (2006–2011)
வி. வி. ராஜன் செல்லப்பா (2011–2016)
இந்நிலையில், மதுரையின் எட்டாவது மேயராகவும் இரண்டாவது பெண் மேயராகவும் திமுகவின் மாமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திராணி இன்று (மார்ச் 4) பொறுப்பேற்றுக்கொண்டார்.
மதுரை மாநகராட்சியின் விரிவாக்கம் பெற்ற வார்டுகளில் தற்போது நிலவும் குடிநீர் சிக்கல், முழுமையடையாத பாதாள சாக்கடைத் திட்டங்கள், மத்திய அரசின் நிதி உதவியோடு நடைபெறும் சீர்மிகு நகரம் திட்டங்கள் எனப் பல்வேறு சவால்கள் உள்ள நிலையில், இந்திராணி மேயராக பொறுப்புக்கு வந்துள்ளார்.