2013ஆம் ஆண்டு மதுரை முனி சாலையைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்ற மருந்துக் கடைக்காரரைக் கடத்தி 15 லட்சம் ரூபாய் பணம் பறித்த வழக்கில் 7 பேருக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கியது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தண்டனையை ரத்து செய்யக் கோரி மேல் முறையீடு செய்தனர்.
அந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று அந்த 7 பேரின் ஆயுள் தண்டனையையும் உறுதி செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் 7ஆவது குற்றவாளியான மதுரை மணி நகரத்தைச் சேர்ந்த கணேசனின் மனைவி அன்னலட்சுமி, தாயார் முத்துமாரி ஆகியோர் 4 வயது பெண் குழந்தையுடன் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் பிரதான வாயிலின் அருகில் அழுது புலம்பியபடி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.