தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு ஆயுள் தண்டனை - தனி நீதிமன்றம் தீர்ப்பு - தனி நீதிமன்றம்

பெண் குழந்தைக்கு எதிரான பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு போக்சோ சட்டத்தின்படி ஆயுள் தண்டனை விதித்து தனி நீதிமன்றம் நேற்று(ஏப். 25) தீர்ப்பளித்தது.

பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு ஆயுள் தண்டனை
பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு ஆயுள் தண்டனை

By

Published : Apr 26, 2022, 3:31 PM IST

மதுரை: 2017ஆம் ஆண்டு மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, திம்மநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் என்பவரின் மகன் தர்மதுரை(25) என்பவர், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்கும் தனி நீதிமன்றம் இந்த வழக்கை நடத்தி வந்தது.

இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், தர்மதுரைக்கு ஆயுள் தண்டனையுடன் 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தனி நீதிமன்றம் நேற்று(ஏப். 25) தீர்ப்பளித்தது. இதேபோல் மதுரை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விரைந்து புலன்விசாரணை முடித்து, உரிய நீதிமன்றத்தில் குற்ற இறுதி அறிக்கை தாக்கல்செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டத்தின் மூலம் கடும் நடவடிக்கை கண்டிப்பாக வழங்கப்படும் என்றும் இக்குற்றச்செயலில் ஈடுபடும் நபர்களுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'மாணவர்களை நல்வழிப்படுத்தும் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்'

ABOUT THE AUTHOR

...view details