தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் - மருத்துவமனைக்கு எச்சரிக்கை - கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம்

கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு மருத்துவ பணிகள் துறை இணை இயக்குநர் வெங்கடாசலம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அங்கு கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம்
கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம்

By

Published : Jun 25, 2021, 7:44 AM IST

மதுரை:மதுரை அண்ணா நகர் அருகே உள்ளது ரக்ஷா மருத்துவமனை. இங்கு கரோனா சிகிச்சைக்காக பல்கீஸ்பேகம் என்ற பெண்மணி மே 15ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், மே 19ஆம் தேதி வரை சிகிச்சையில் இருந்த அப்பெண்மணியிடம் தமிழ்நாடு அரசு விதித்த கட்டணத்திற்கு மாறாக அதிக தொகை வசூலிக்கபப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பான விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 2 லட்சத்து 48 ஆயிரத்து 590 ரூபாயை திருப்பிச் செலுத்த மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவுக்கு பிறகும் பணத்தை திருப்பிச் செலுத்தவில்லை.

இந்நிலையில், "ஜூன் 23ஆம் தேதியிலிருந்து ரக்ஷா மருத்துவமனை கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்ககூடாது. மேலும் மருத்துவமனையில் தற்போது சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளை சிறப்பாக கவனித்துக் கொள்வதுடன் அவர்கள் புகார் அளிப்பதற்கு இடமளிக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டது.

மேலும், "தற்போதுள்ள நோயாளிகளுக்கு தமிழ்நாடு அரசு விதித்த கட்டணம் தான் வசூலிக்கப்பட வேண்டும். மேற்கண்ட உத்தரவுகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் இவற்றை மீறினால் ரக்ஷா மருத்துவமனை முழுவதுமாக பூட்டி சீல் வைக்கப்படும்" என மருத்துவ பணிகள் துறை இணை இயக்குநர் வெங்கடாசலம் உத்தரவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details