தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

எல்.ஐ.சி ஊழியர்கள் சார்பில் அரசு மருத்துவமனைக்கு ரூ 2.50 லட்சம் நிவாரணம்! - madurai govt hospitals

மதுரை அரசு மருத்துவமனைக்கு எல்.ஐ.சி ஊழியர்கள் சார்பில் ரூ. 2.50 லட்சம் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

lic-workers-gave-corona-equipment-to-madurai-govt-hospitals
எல்.ஐ.சி ஊழியர்கள் சார்பில் அரசு மருத்துவமனைக்கு ரூ 2.50 லட்சம் நிவாரணம்!

By

Published : May 30, 2021, 10:45 PM IST

மதுரை:கரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை நாடு முழுவதும் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அரசியல் கட்சிகள், நடிகர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் நிதி அளித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் மதுரை அரசு மருத்துவமனைக்கும், தோப்பூர் அரசு நெஞ்சக மருத்துவமனைக்கும் எல்.ஐ.சி ஊழியர்கள் சார்பில் ரூ 2.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. மதுரை ஆட்சியர் அனிஷ்சேகர், மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசனிடம் இந்த நிவாரணப் பொருள்களை எல்.ஐ.சி ஊழியர்கள் நேரில் வழங்கினர்.

இதனைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் எல்.ஐ.சி ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் எல்.ஐ.சி முதன்மை கோட்ட மேலாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு உதவிகளை அரசு மருத்துவமனைக்கு செய்ய விருப்பதாகவும், மதுரை எல்.ஐ.சி ஊழியர்கள்சங்கம் சார்பில் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்ச அளித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:உயிரிழப்பு பதிவில் பழைய விதியை மாற்ற முதலமைச்சரின் தலையீடு தேவை!

ABOUT THE AUTHOR

...view details