தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 3, 2020, 11:55 PM IST

ETV Bharat / city

சிறுத்தை நடமாட்டத்தால் கொடிவேரி மக்கள் அச்சம்!

ஈரோடு: கொடிவேரி கிராமத்தின் கரும்பு தோட்டங்களுக்குள் சிறுத்தை ஒன்று நெடு நாள்களாகவே நடமாடி வருவதால் அப்பகுதி விவசாயிகள் பதற்றத்தோடு தங்கள் தோட்டங்களுக்குச் சென்று வருகின்றனர்.

கொடிவேரி பகுதியில் சிறுத்தை நடமாட்டம்
கொடிவேரி பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள கொடிவேரி பகுதியில் வசிப்பவர் பீட்டர். இவர் தனது தோட்டத்தில் உள்ள தொழுவத்தில் ஒரு மாடும் கன்றுக்குட்டியும் வளர்த்து வந்தார். இன்று காலை வழக்கம்போல் தனது தோட்டத்திற்கு வந்த பீட்டர், அங்குள்ள மாட்டு கொட்டகைக்குச் சென்று பார்த்தபோது அங்கு மாடு மட்டுமே இருந்த நிலையில் கன்றுக்குட்டி காணாமல் போனது.

இதனால் அப்பகுதியில் தேடி பார்த்துள்ளார். அப்போது அங்கு சிறுத்தையின் கால் தடம் பதிவானது தெளிவாகத் தெரிந்தது. அதை பின்தொடர்ந்து சென்று பார்த்தபோது கரும்பு தோட்டத்தில் கன்று குட்டி கொல்லப்பட்டு பாதி தின்ற நிலையில் கிடந்தது. இதுகுறித்து பீட்டர் உடனே டி.என் பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த வனத்துறையினர் கன்றுக்குட்டி கொல்லப்பட்ட இடத்தைச் சுற்றிலும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கொடிவேரி பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

அந்த சிறுத்தையின் கால் தடத்தை வைத்து ஆய்வு செய்து பார்த்தபோது அப்பகுதியில் வெகுநாள்களாகவே சிறுத்தை நடமாடியது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து கிராம மக்களும் ஆய்வு செய்தபோது திடீரென கரும்பு தோட்டத்தில் இருந்து சிறுத்தை தாவி ஓடியது. இதனால் அலறிப் போன கிராம மக்கள் தப்பி ஓடினர். சிறுத்தை கரும்புக் காட்டில் பதுங்கி இருப்பது உறுதியான நிலையில், அதனைக் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க;

ஆழ்துளைக் கிணறு விவகாரம் - அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details