தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ராகுல்காந்திக்கு 'தமில்' வகுப்பெடுத்த நடிகை குஷ்பு - மதுரை பாஜக பிரச்சாரத்தில் ருசிகரம்! - Madurai District latest News

மதுரை: காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் தமிழ்மொழி உச்சரிப்பைக் கேலி செய்து, நடிகையும், பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்பு, 'தமிலை' முறையாகக் கற்றுக்கொள்ள அறிவுறுத்தினார்.

மதுரை பாஜக பிரச்சாரம்
Madurai BJP campaign

By

Published : Jan 31, 2021, 8:24 AM IST

பாஜக சார்பாக தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்று (ஜன.30) மதுரையில் தொடங்கியது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, பாஜக தேசிய செய்தித் தொடர்பாளரான நடிகை குஷ்பு என கட்சியினர் என பலர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய குஷ்பு, "ராகுல்காந்தி தமிழ் மேல் தனக்கு தனி பாசம் உண்டு. திருக்குறளை படித்துவிட்டு நான் பேசுகிறேன் என கூறியுள்ளார். நீங்கள் 1330 குறளை நிச்சயமாக இந்த ஜென்மத்தில் படிக்க முடியாது.

உங்களுக்கு நான் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். நீங்கள் ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டிற்கு வரும்போது 'ஐ லவ் டமில் பியூப்பிள்' என்று சொல்கிறீர்கள். ஐயா அது 'டமில்' கிடையாது. தமில் (???) என்று 'ழ்'-ஐ அழுத்தம் கொடுத்து உச்சரிக்க வேண்டும். அடுத்த முறை வரும்போது தமிழ்நாடு, தமிழ் என்று தெளிவாகக் கூறுங்கள்.

மதுரை பாஜக பிரச்சாரத்தில் ருசிகரம்

அதேபோன்று, முக.ஸ்டாலின் துண்டுச் சீட்டு வைத்துக்கொண்டு தமிழ் முறையாகப் பேசத் தெரியாமல் தமிழ்நாடு முதலமைச்சராக கனவு காணலாமா..? என பேசினார்.

இதில் முக்கியம் என்னவென்றால் குஷ்பு தமிழை உச்சரித்த ஒவ்வொரு முறையும் 'தமில்' என்றே கூறினார்.

இதையும் படிங்க: மூடலின் விளிம்பில் 90 சதவீத ஹோட்டல்கள்- மத்திய பட்ஜெட்டில் சுற்றுலாத்துறைக்கு வரி விலக்கு கிடைக்குமா?

ABOUT THE AUTHOR

...view details