தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக சிவகங்கை மாவட்டம் திருபுவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் ஆறாம்கட்ட அகழாய்வு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் தொடங்கிவைக்கப்பட்டது. இந்த அகழாய்வைப் பொறுத்தவரை கீழடி அருகேயுள்ள கொந்தகை மணலூர் அகரம் ஆகிய பகுதிகளிலும் தற்போது ஆய்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
கொந்தகை அகழாய்வில் பழங்கால மண்பானை கண்டெடுப்பு! - keezhadi 6th phase
மதுரை: கீழடியில் நடைபெற்றுவரும் ஆறாம் கட்ட அகழாய்வின் தொடர்ச்சியாக அதனருகே உள்ள கொந்தகையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மண்பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கொந்தகையில் நடைபெற்றுவரும் அகழாய்வுப் பணிகளில் கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாடு தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் இப்பகுதிகளில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
கொந்தகைமில் இரண்டு குழிகள் தோண்டப்பட்டு உள்ள நிலையில் இன்று பழங்காலத்து பானை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியானது இறந்தவரை புதைக்கும் பழங்கால ஈமக்காடு என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு ஆய்வுப் பணிகள் நடைபெறுவதற்கு முன்பாகவே 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழிகள் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டன.
TAGGED:
keezhadi 6th phase