தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'கண்டா வரச்சொல்லுங்க' - மதுரை காவலன் செயலியில் அழகரை தேடி தவித்த மக்கள்! - கண்டா வரச் சொல்லுங்க

அழகர் இருக்கும் இடத்தைக் கண்டறிவதற்காக, மதுரை மாவட்ட காவல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட மதுரை காவலன் செயலி இன்று காலை முதல் செயல்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கண்டா வரச் சொல்லுங்க! காவலன் செயலியில் அழகரை தேடி தவித்த மக்கள்!
கண்டா வரச் சொல்லுங்க! காவலன் செயலியில் அழகரை தேடி தவித்த மக்கள்!

By

Published : Apr 15, 2022, 3:44 PM IST

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் துறை, இந்து சமய அறநிலையத்துறை ஆகியவை இணைந்து 'மதுரை காவலன்' எனும் செயலியில் டிராக் அழகர் என்ற புதிய வசதி ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் அழகர் திருமாலிருஞ்சோலையில் இருந்து கிளம்பியது முதல் மதுரை வந்து மீண்டும் மலைக்கு திரும்புவது வரை அழகர் எங்கு இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

நேற்று இரவு வரை மிக சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த இந்த செயலியில் தற்போது 'டிராக் அழகர்' என்ற வசதி மட்டும் இயங்காமல் போனதால், பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். இதுகுறித்து மதுரை மாவட்ட காவல் துறை உயர் அலுவலர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, தொழில்நுட்பக்கோளாறு காரணமாக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனை சற்று நேரத்தில் சரி செய்து விடுவோம் என உறுதி அளித்துள்ளனர்.

இதையும் படிக்க:எங்கே இருக்கார் கள்ளழகர்...? இந்த செயலியில் பாருங்கள்...

ABOUT THE AUTHOR

...view details