தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குடகனாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட தடைகோரிய வழக்கு: கரூர் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு! - Karur district news

மதுரை: குடகனாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட தடைகோரிய வழக்குத் தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கரூர், குடகனாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட தடைகோரிய வழக்கு
கரூர், குடகனாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட தடைகோரிய வழக்கு

By

Published : Mar 29, 2021, 7:12 PM IST

கரூர், அரவக்குறிச்சியைச் சேர்ந்த மனோகரன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல்செய்திருந்தார். அதில்,

"கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவில் உள்ள வெஞ்சமாங்கூடலூர், படத்தநாயக்கன்பட்டி, சின்னவேடம்பட்டி, நாகம்பள்ளி கிராமத்தில் குடகனாறு தொடங்கும் இடத்தில் அணை கட்ட முயற்சி நடந்துவருகிறது.

அவ்வாறு கட்டினால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாக வாய்ப்புள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி அலுவலர்களிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

ஆகவே கரூர் குடகனாற்றின் குறுக்கே படத்தநாயக்கன்பட்டி கிராமத்தில் தடுப்பணை கட்ட தடைவிதித்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, இது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: 'பாலியல் சிடி விவகாரம்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இளம்பெண் கடிதம்!'

ABOUT THE AUTHOR

...view details