தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கார்த்திகை தீப ஒளியில் ஜொலிக்கும் மீனாட்சியம்மன் கோயில் - மதுரை மீனாட்சியம்மன்

திருக்கார்த்திகை முன்னிட்டு மதுரை மீனாட்சி கோயிலில் அமைந்துள்ள பொற்றாமரைக்குளம் ஒளிவெள்ளத்தில் பக்தர்களை பரவசப்படுத்தியது.

தீப ஒளியில் ஜொலிக்கும் மீனாட்சியம்மன் கோயில்
தீப ஒளியில் ஜொலிக்கும் மீனாட்சியம்மன் கோயில்

By

Published : Nov 19, 2021, 10:46 PM IST

மதுரை:உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தமிழ் மாதம் தோறும் திருவிழாக்கள் நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் கார்த்திகை தீப திருவிழா கடந்த நவம்பர்14ஆம் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் பஞ்சமூர்த்திகள் கோயில் வளாகத்திலுள்ள ஆடி வீதிகளில் எழுந்தருள்வார்.

மீனாட்சியம்மன் கோயில்

10 நாள்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் 19ஆம் தேதியான இன்று தீபத்திருநாளை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக்குளம், அம்மன் மற்றும் சுவாமி சன்னதிகளில் லட்சதீபம் ஏற்றப்பட்டது. சுமங்கலிகள் பொற்றாமரை குளம் மற்றும் அம்மன் சன்னதி சுவாமி சன்னதி பகுதிகளில் மண் கல்லால் செய்யப்பட்ட சிறு சட்டிகளில் நெய் ஊற்றி , பஞ்சு திரி இட்டு லட்சதீபம் ஏற்றினர்.

அதிகளவில் லட்ச தீபம்

பெண்கள் தங்களது இல்லங்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு வந்து அங்கு உள்ள தீபங்களில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வர்.

இதனால் பெண்கள் நினைக்கும் காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். அந்த வகையில் இந்த ஆண்டும் அதிகளவில் லட்ச தீபம் ஏற்றுவதற்காக பெண்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர்.

தீப ஒளியில் ஜொலிக்கும் மீனாட்சியம்மன் கோயில்

கரோனா பரவல் காரணமாக கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் தனிமனித இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்வது கிருமிநாசினி அடிக்கடி பயன்படுத்துவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு கோயில் நிர்வாகம் சார்பில் அனைத்து விதமான ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.

இதையும் படிங்க:சத்தியமங்கலத்தில் கொட்டும் மழையில் கார்த்திகை தீப விழா!

ABOUT THE AUTHOR

...view details