கன்னியாகுமரி பலவேசமுத்து என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “இந்தியாவின் தென்முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான இங்கு, தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல், வங்கக்கடல் ஆகிய மூன்று கடல்களும் ஒரே இடத்தில் சங்கமிக்கும் இடத்தை 'முக்கடல் சங்கமம்' என்று அழைக்கிறோம்.
கன்னியாகுமரி, திருவேணி சங்கமம்
இதைத்தொடர்ந்து, கன்னியாகுமரி, திருவேணி சங்கமத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வணிக நோக்கில் கடைகள் கட்டப்பட்டு வருகிறது. விதிமுறைப்படி திருவேணி சங்கமத்தில் கடைகள் கட்டக்கூடாது.
கடற்கரையிலிருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் உள்ளது. மேலும் நிரந்தர கடைகள் கட்டுமானம் நடைபெறுவதால், முக்கடல் சங்கமத்திலிருந்து காமகோடி பீடம், விவேகானந்தர் கோயில், சுனாமி நினைவிடம் உள்ளிட்ட தலங்களை பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க முடியாது.