தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பெருந்தலைவர் காமராஜரின் வரலாறு தோல்பாவைக் கூத்து வடிவில்!

மதுரை: காமராஜரின் பிறந்தநாளான நேற்று, மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், காமராஜர் வரலாற்றை தோல்பாவைக் கூத்தின் வழியாக மாணவர்களுக்கு, இட்டுகாட்டியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

kamarajar birthday

By

Published : Jul 16, 2019, 8:03 AM IST

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தோல்பாவைக்கூத்துக் கலைஞர் முத்து லட்சுமண ராவ் தலைமையில் மணிகண்டன், காளிமுத்து ஆகியோர் இக்கலையை மாணவர்கள் முன்பாக நிகழ்த்திக் காட்டினர். குறிப்பாக நேற்று காமராஜரின் 117ஆவது பிறந்தநாள் என்பதால் தோல்பாவைக்கூத்தில் காமராஜருக்கு என்று தனியாக உருவம் உருவாக்கி மாணவர்களின் பரவசத்தோடு நிகழ்த்திக் காட்டினர்.

‘பெருந்தலைவர் காமராஜரின் வரலாறு தோல்பாவைக் கூத்து வடிவில்!

இதுகுறித்து அப்பள்ளியின் தமிழாசிரியர் சிவா கூறுகையில், காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை இளம் தலைமுறை மாணவர்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். ஆனால் அதையும் நமது பாரம்பரிய கலை வடிவத்தில் கூறினால். மாணவர்கள் இன்னும் ரசிப்பார்கள் என்ற அடிப்படையில் தோல்பாவை கலையின் வழியாகக் காமராஜர் வரலாற்றை நாங்கள் மாணவர்களுக்குக் கற்பிக்க முயற்சி செய்திருக்கிறோம்.

இதுகுறித்து தோல்பாவைக் கலைஞர் முத்து லட்சுமண ராவ் இடம் கூறியவுடன், அடுத்த இரண்டு நாட்களுக்குள் காமராஜருக்கு என்று தனியாக உருவம் ஒன்றை உருவாக்கி மிகச் சிறப்பாகச் செய்து காண்பித்து விட்டார். இது மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இனி தொடர்ந்து இதுபோன்ற கலைகளின் வாயிலாக, மாணவர்களுக்குத் தலைவர்களின் வரலாற்றைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற உற்சாகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி அழிந்துகொண்டிருக்கும், தமிழ் பாரம்பரிய கலைகளை மீட்டுருவாக்கம் செய்வதும், எங்கள் நோக்கங்களில் முக்கியமானதாகும் என்றார். இந்த தோல்பாவைக் கூத்தானது, காமராஜர் முதலமைச்சர் பதவி வகித்தபோது நடைபெற்ற சம்பவங்களை விளக்கியது.

ABOUT THE AUTHOR

...view details