மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் இது தொடர்பான வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் இணைந்து மசோதாவை உருவாக்கி அனுமதிக்கு அனுப்பும்போது, அதில் கூடுதல் கால அவகாசம் கேட்பது விசித்திரமானது என்றும், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதால் விரைவாக இது குறித்து முடிவெடுக்கப்பட வேண்டும் என்றனர்.
அதற்கு, இது போன்ற முடிவுகளில், நீதிமன்றத்திற்கு ஆளுநர் பதிலளிக்க வேண்டிய தேவையில்லை எனவும், இவ்விவகாரத்தில் முடிவெடுக்க போதுமான அளவு ஆளுநர் கால அவகாசம் எடுத்துக் கொள்ள விதிகள் உள்ளதாகவும் அரசு தலைமை வழக்கறிஞர் வாதிட்டார். ஆளுநருக்கு உத்தரவிடவோ, காலக்கெடுவை விதிக்கவோ இயலாது என்பது நீதிமன்றத்திற்கும் தெரியும் என்ற நீதிபதிகள், ஆனால், ஏழை மாணவர்களின் நலனைக் கருத்தில் கொள்வதும் அவசியமானது என நீதிமன்றம் கருதுவதாகவும் தெரிவித்தனர்.