தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதுரையில் ஜெயலலிதா சிலை திறப்பு! - jayalalitha death anniversary

மதுரை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினமான நேற்று, அவரது உருவச் சிலை கே.கே. நகர் அருகே திறக்கப்பட்டுள்ளது.

மதுரையில் ஜெயலலிதா சிலை திறப்பு, jayalalitha statue opened in madurai
jayalalitha statue

By

Published : Dec 6, 2019, 7:42 AM IST

மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள கே.கே. நகர் ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் சிலை உள்ளது. இதன் அருகே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 10 அடி உயரம் கொண்ட வெண்கல உருவச் சிலை அமைக்கும் பணிகள் கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்றுவந்தது.

இந்த சிலையின் பணிகள் முடிந்து தற்போது அது இறுதி வடிவம் பெற்றது. இதனிடையே ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டநிலையில், ஜெயலலிதாவின் சிலையை அதிமுகவினர் திறந்து வைத்தனர். இதனையடுத்து ஏராளமான தொண்டர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மதுரையில் திறக்கப்பட்டுள்ள ஜெயலலிதா சிலை

முன்னதாக புதிய சிலை திறப்பதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details