தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மல்லிகையின் விலை ரூ.1000 ஆக சரிவு! - பூக்களின் விலை

மதுரை: மலர் சந்தையில் மல்லிகையின் விலை ரூ.1000ஆக சரிந்ததால், பூக்களின் விலையும் பெருமளவு குறைந்துள்ளது.

jasmine
jasmine

By

Published : Feb 18, 2021, 2:27 PM IST

மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ளது ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம். மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டுமன்றி விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு வகையான பூக்கள் இங்கு விற்பனைக்கு வருகின்றன.

பூக்களின் விலை நிர்ணயத்தில் மதுரை மலர் வணிக வளாகம் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்நிலையில் மதுரை மல்லிகை கிலோ ரூ.1000ஆக குறைந்து காணப்படுகிறது. பிச்சிப்பூ ரூ.700, முல்லை ரூ.800, சம்பங்கி ரூ.120, பட்டன் ரோஸ் ரூ.80, பட்ரோஸ் ரூ.80 என பூக்களின் விலை கணிசமாகக் குறைந்து காணப்படுகிறது.

மதுரை மல்லியின் விலை மேலும் சில நாள்கள் நீடிக்கும் எனப் பூ வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details