தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மல்லியோ மணக்கிறது! உற்பத்தி செய்தவனின் மனமோ வாடுகிறது! - Madurai Jasmine

மதுரை: மல்லிகை விலை கிடுகிடுவென சரிந்தது. தற்போது கிலோ ரூ.150-க்கு விற்பனைசெய்யப்படுகிறது. விழா காலமாக இருந்தபோதும் கடுமையான விலை சரிவு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மல்லிகை விலை கிடுகிடுவென சரிந்தது
மல்லிகை விலை கிடுகிடுவென சரிந்தது

By

Published : Apr 19, 2021, 7:28 PM IST

மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம். தென் மாவட்டங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்த மலர்ச் சந்தையாக இது திகழ்கிறது.

மல்லி விலை சரிவு

திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்தும், மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் உற்பத்தியாகும் பூக்கள் இங்கே விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.

குறிப்பாக, இங்கிருந்து (மதுரை) மல்லிகை பிற மாவட்டங்களுக்கு மட்டுமன்றி வெளி மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.

இந்நிலையில், தற்போது சித்திரைத் திருவிழா காலமாக இருந்தபோதும் மதுரை மல்லிகை விலை கிடுகிடு சரிவைக் கண்டுள்ளது. மதுரை மலர் வணிக வளாகத்தில் இன்று (ஏப். 19) மல்லிகை ஒரு கிலோ ரூபாய் இருநூறுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

பூக்களின் விலைகள்:

பூ (கிலோ) விலை
மல்லிகை ரூ. 200
முல்லை ரூ. 150
பிச்சி ரூ. 200
சம்பங்கி ரூ. 50
செவ்வந்தி ரூ. 150
அரளி ரூ. 50
செண்டுமல்லி ரூ. 30
ரோஜா ரூ. 80

பிற பூக்களின் விலையும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக மதுரை மலர் வணிக வளாகத்தில் பூவின் விற்பனை மிக மிக மந்தமாக நடைபெறுகிறது. உற்பத்தியாளர்களான விவசாயிகள் இதனால் மிகவும் பாதிப்படைந்துள்ளனர் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: 'இமயமலை உப்பில் இவ்வளவு நன்மைகளா!'

ABOUT THE AUTHOR

...view details