மதுரை மாநகரின் மற்றொரு அடையாளமாக கருதப்படும் மதுரை மல்லிகை மத்திய அரசின் புவிசார் குறியீட்டு அந்தஸ்தை பெற்றதாகும். இதன் மணம், தரம் காரணமாக உலகப் புகழ்பெற்று விளங்குகிறது. இதனால் மதுரை மல்லிகை பிற மாவட்டங்கள் மட்டுமன்றி வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்டம் மட்டுமன்றி அண்டை மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மதுரை மலர் சந்தைக்கு பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மதுரை மல்லிகை கடுமையான விலை ஏற்றம் கண்டிருந்த நிலையில் தற்போது விலை சரியத் தொடங்கியுள்ளது.
இன்றைய நிலவரப்படி மதுரை மல்லிகை ரூ.300, பிச்சி மற்றும் முல்லை பூக்கள் தலா ரூ.200, சம்பங்கி ரூ.50, பட்டன் ரோஸ் ரூ.50, அரளி ரூ.200 எனது விற்பனை செய்யப்படுகிறது பிற பூக்களின் விலையும் குறைந்து காணப்படுகிறது.