மதுரையில் அமமுக விருதுநகர், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கட்சி பதிவு, சின்னம் குளறுபடி காரணங்களால் வேலூர், நாங்குநேரி தேர்தல்களில் போட்டியிடவில்லை. உள்ளாட்சி தேர்தலுக்குள் எங்களது கட்சி பதிவு பணிகள் முடிவடையும் என்பதால் அந்த தேர்தலில் அமமுக போட்டியிடும்.
'சூர்யாவை அவதூறாக பேசுவது அமைச்சர்களுக்கு அழகல்ல..!' - டிடிவி தினகரன் - சூர்யா கருத்து
மதுரை:"நடிகர் சூர்யாவின் கருத்தில் உடன்பாடில்லை என்றால் விட்டு விட வேண்டும். அவரை பற்றி அவதூறாக பேசுவது அமைச்சர்களுக்கு அழகல்ல" என்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தேர்தலில் டொபாசிட் இழந்த திமுக, மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றது. ஒரு தேர்தலை வைத்து ஒரு கட்சியை முடிவு செய்ய முடியாது. ஒரு தேர்தல் தோல்வியால் அமமுக பின்னடைவு என்பது தவறு. மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த தவறான பிம்பத்தை உடைத்து அடுத்த தேர்தல்களில் வெற்றி பெறுவோம்.
சூர்யாவின் கருத்தில் உடன்பாடு இல்லாவிடில் அமைச்சர்கள் அவரை அவதூறாக பேசக்கூடாது. சூர்யாவின் கருத்து சரியானது. தமிழ்நாட்டிற்கு எதிரான நீட், மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை தடை செய்யாமல் ஆட்சியை காப்பாற்றும் நோக்கிலே அதிமுக அரசு மத்திய அரசோடு இணக்கமாக இருந்து வருகிறது, என்று தெரிவித்தார்.