தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கச்சத்தீவை 100 நாட்களில் மீட்பாரா ஸ்டாலின்! - கட்சத்தீவு

மதுரை: கச்சத்தீவை மீட்க மனு கொடுத்தால் மு.க.ஸ்டாலின் 100 நாட்களில் மீட்டுக் கொடுப்பாரா என மதுரை வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா கேள்வி எழுப்பியுள்ளார்.

mla
mla

By

Published : Feb 16, 2021, 3:27 PM IST

மதுரை வடக்கு சட்டப்பேரவை தொகுதி நிதியிலிருந்து, செல்லூர் பகுதியில் 1 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட 5 புதிய சாலைகளை அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா திறந்து வைத்தார். விழா மேடையில் பேசிய ராஜன் செல்லப்பா, "மக்கள குறைகளை தீர்க்க ஸ்டாலின் 100 நாட்கள் கேட்கிறார். அதிமுக ஆட்சியில் ஒரு நாளில் மக்களின் குறைகள் தீர்க்கப்படுகின்றன. மனு கொடுத்தால் 100 நாட்களில் திமுக ஆட்சியில் தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை ஸ்டாலினால் மீட்க முடியுமா?.

முதலமைச்சரின் திட்டங்களை மக்கள் வரவேற்கிறார்கள். அரசின் சாதனை திட்டங்களை திமுக தடுக்க நினைக்கிறது. விவசாயிகள் நலன் கருதியே கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதனால் அதிமுகவினர் யாரும் பயன்பெறவில்லை. விவசாயக் கடன்கள் தள்ளுபடியில் யார் யார் பயன்பெற்றுள்ளனர் என்கிற பட்டியலை முதலமைச்சர் விரைவில் வெளியிடுவார்" எனக் கூறினார்.

கச்சத்தீவை 100 நாட்களில் மீட்பாரா ஸ்டாலின்! - ராஜன் செல்லப்பா கேள்வி!

இதையும் படிங்க: சிதம்பரம் காலாவதியான அரசியல்வாதி - அமைச்சர் ஆர்பி உதயகுமார்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details