மதுரையில் நாளை மறுநாள் முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, “ கடந்த 1804 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வைகை குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. 1904 இல் ஆரப்பாளையம் பகுதியில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது.
தற்போது 1,295 கோடி மதிப்பீட்டில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து குழாய் மூலமாக மதுரைக்கு குடிநீர் நிரந்தரமாக கிடைக்கும் வகையில் பணிகள் நடைபெற உள்ளது. இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் மதுரை வருகிறார். மேலும் 60 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளையும், ரூ.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஆட்சியர் வளாக கட்டடத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார்.