தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'திமுகவில் தலைவிரித்தாடும் உள்கட்சி பூசல்...!' - அதிமுக செய்தி தொடர்பாளர் திமுக குறித்து விமர்சனம்

கோவை: திமுகவில் உள்கட்சி பூசல் தலைவிரித்தாடுகிறது எனவும் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க அக்கட்சி பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதாகவும் அதிமுக விமர்சித்துள்ளது.

admk

By

Published : Nov 16, 2019, 1:58 PM IST

இது தொடர்பாக கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக செய்தித்தொடர்பாளர் செல்வராஜ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்து வெற்றிபெறுவோம் எனவும் மக்களால் ஏற்கப்பட்ட ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றுவருவதாகவும் கூறினார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தல் தோல்வியிலிருந்து மு.க. ஸ்டாலின் மீளவில்லை என்று தெரிவித்த செல்வராஜ், திமுகவில் உள்கட்சி பூசல் தலைவிரித்தாடும் நிலையில் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க அக்கட்சி பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதாகக் குற்றஞ்சாட்டினார்.

அதிமுக செய்தித்தொடர்பாளர் செல்வராஜ்

தொடர்ந்து பேசிய அவர், பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அடுத்தகட்ட நகர்வு நீதிமன்றத்தின் கையில் உள்ளது என்றும் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details