தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த தம்பதி! சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டதால் மிரட்டல்! - raman muththarasi inter caste marriage

இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று நாட்களுக்கு முன்னர் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் தொலைபேசி மூலம் கொலை பெண் வீட்டார் மிரட்டல் விடுப்பதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்து பாதுகாப்பு கோரியுள்ளனர்.

inter caste marriage couple in collector office
inter caste marriage couple in collector office

By

Published : Oct 17, 2020, 6:24 PM IST

மதுரை: சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட தம்பதி, பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பான சூழல் நிலவியது.

இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களான, ராமன் என்ற இளைஞரும், பரவை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியான முத்தரசியும் மூன்று நாட்களுக்கு முன்னர் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, இருவருக்கும் தொலைபேசி மூலம் பெண் வீட்டார் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், அதனால் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் கூறிய தம்பதி, இச்சூழலில், மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.

சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட தம்பதி

இதனால் ஆட்சியர் அலுவலகம் பரபரப்படைந்தது. இதனிடையே தம்பதியரின் குற்றச்சாட்டு குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை கரும்பாலையைச் சேர்ந்த ராமனும், முத்தரசியும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள பெற்றோரிடம் அனுமதி கோரிய நிலையில், முத்தரசியின் வீட்டார் திருமணம் செய்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் பெற்றோர் எதிர்ப்பை மீறி முத்தரசி தன் காதலனை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details