நாளை பொங்கல் திருநாளை முன்னிட்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற இருப்பதால் அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அவனியாபுரம்-திருப்பரங்குன்றம் சாலையில் அமைந்துள்ள சிவகுருநாதசுவாமி கோவில் முன்பாக வாடிவாசல் அமைக்கப்பட்டு வருகிறது. வாடிவாசல் முன்பாக இரண்டு பக்கமும் பார்வையாளர்களுக்கான காலரிகள் சவுக்கு கம்பு தடுப்புகளோடு அமைக்கப்பட்டுள்ளன.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! விழா ஏற்பாடுகள் தீவிரம்! - ஜல்லிக்கட்டு
மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழாவிற்கான முன் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ராகுல் காந்தி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வரவிருப்பதால் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், போட்டி நடைபெறும் இடத்தில் தேங்காய் நார் கழிவுகள் கொட்டப்பட்டு பரப்பப்பட்டுள்ளன. வாடிவாசலுக்குள் நுழையும் வண்ணம் காளைகள் வரிசையாக வருவதற்கு கம்பித் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் ராகுல்காந்திம் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஜல்லிக்கட்டைக் காண அவனியாபுரம் வரவிருப்பதால், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், மோப்ப நாய்கள் கொண்டு தொடர் சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்ட ஆன்லைன்ல பாருங்க!