மதுரை: நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றிவந்த காவல் ஆய்வாளர் வசந்தி ஜூலை மாதம் கூலித் தொழிலாளியிடம் 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இதனால், தனக்கு ஜாமின் வழங்க கோரி அவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன் இன்று (செப்.30) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இல்ல நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டி ஜாமீன் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் வசந்திக்கு மூன்று நாள்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், “உரிய காவல் துறை பாதுகாப்புடன் இருக்க வேண்டும், வீட்டில் இருந்து வெளியே செல்லவோ, கைபேசி உபையோகிக்கவோ, மற்ற நபர்களுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புகொள்ள கூடாது, மனுதாரர் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க:சொத்துகுவிப்பு வழக்கு: விசாரணைக்கு ஆஜராகாத எம்.ஆர். விஜயபாஸ்கர்