தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதுரையில் ரவுடியை வெட்டி கொன்ற மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு - rowdy murder case

மதுரை: கீழ் மதுரை ரயில் நிலையம் அருகே முன்விரோதம் காரணமாக ரவுடியை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த கும்பலை காவல்துறை தீவிரமாக தேடிவருகின்றனர்.

கீழ் மதுரை ரயில் நிலையம்

By

Published : Apr 28, 2019, 11:24 PM IST

மதுரை எம்எம்சி காலணி பகுதியை சேர்ந்த பிள்ளையார் சதீஷ் என்பவர் மீது கஞ்சா, கொள்ளை, திருட்டு, வழிப்பறி உட்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் இன்று மதியம் கீழ் மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள முட்புதரில், சதிஷை மர்ம கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தில் மதுரை மாநகர சட்ட ஒழுங்கு துணை ஆணையர் சசிமோகன் ஆய்வு செய்தார். இந்த சம்பவம் குறித்து அவனியாபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மதுரையில் பட்டப்பகலில் ரயில் நிலையம் அருகே ரவுடியை மர்ம கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் ரவுடியை வெட்டி கொன்ற மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

ABOUT THE AUTHOR

...view details